தில்லாலங்கடி விமர்சனம்
தன் நண்பனின் திருட்டு காதல் திருமணத்துக்கு உதவுகிறேன் பேர்விழி என்று, அவர்களின் ப்ளான் எல்லாவற்றையும் பெண்ணின் அம்மாவுக்கு தெரியபடுத்தி, கடைசி நேர சேஸிங், குழப்படி எல்லாவற்றையும் மீறி திருமணத்தை நடத்தி வைக்கிறான். ஏன் இப்படி செய்தான் என்று கேட்டால் “சும்மா ஓடி வந்து கல்யாணம் செய்து கொண்டால். அதிலென்ன கிக் இருக்கும் அதனால் தான் என்கிறான். இப்படி தான் செய்யும் பிரதி விஷயங்களிலும் கிக்குக்காக செய்யும் புத்திசாலி, கல்யாண்.
தன் தங்கை அவனை காதலிப்பதாய் சொல்ல, அவன் கிக்குக்காக எதையும் செய்பவன் என்று சொல்லச் சொல்லி அவனிடம் கேட்க, அவனும் அப்படியே சொல்லி ஆனால் அவன் தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் அது வேறு யாருமில்லை உன் அக்காதான் என்கிறான். ஒரு கட்டத்தில் ஏதாவது ஒரு இடத்தில் நிரந்தரமாய் வேலை செய்தால் அவனை காதலிப்பதாய் சொல்ல, அதற்காக ஒரு வேலையில் சேர்ந்து, பின் வேலை விட்டுவிடுகிறான் அதனால் அவனை பிரிகிறாள் காதலி.
காதலியின் பிரிவிற்கு பிறகு அவன் மிகப் பெரிய கொள்ளைக்காரனாய் ஆக, அவனை தேடி போலீஸ் ஆபிஸர் கல்யாண் அலைய, திருடன் கல்யாணுக்கும், போலீஸ் கல்யாணுக்கு நடக்கும் கேட் & மவுஸ் கேமில் யார் வெற்றி பெற்றார்கள், ஏன் கல்யாண் திருடனானான்?. ஹீரோயினுக்கும் அவனுககும் திருமணம் நடந்தத.? என்பது தான் கதை.
ஜெயம் ரவி வழக்கம் போல அலட்டி கொள்ளாமல் நடித்திருகிறார். படம் முழுக்க அவரின் ட்ரேட்மார்க் காமெடி காட்சிகள். க்ளைமாக்ஸ் காட்சிகளில் கொஞ்சம் நடிக்க முயற்சி செய்திருக்கிறார்.
தமனா கொஞ்சம் சதை போட்டிருக்கிறார். அழகாய் இருக்கிறார்.ஜெயம் ரவிக்கும், அவருக்கும் நடக்கும் காதல் போட்டி காட்சிகளில் நடிக்கவும் செய்கிறார்
ஜெயம் ரவியை துரத்தும் போலீஸ் ஆபீஸராய் நம்ம ஷாம். அந்த வேடத்துக்கு அருமையாய் பொருந்தியிருக்கிறார். படு ஹார்டான வாய்ஸை அவருக்கு டப் செய்திருக்கிறார்கள். அது தான் அவ்வளவாக பொருந்தவில்லை.
வழக்கம் போல் வடிவேலு தூள் பரத்துகிறார். அதிலும் ஜெயம் ரவிஇடம் மாட்டி கொண்டு அவர் படும் பாடும், அவரது ரியாக்ஷனும்.. இலியானா ஜெயம் ரவியை வெறுப்பேற்ற இவரை காதலிப்பதாய் சொல்ல, ஜெயம் ரவிஇடமே ஐடியா கேட்டு அது ஒவ்வொரு முறையும் சொதப்ப, காதல் வயப்படும் போதெல்லாம் பின்ணனியில் வயலின் வாசிக்கும் ஆட்கள் என்று சரி காமெடி
.
முதல் பாதி முழுவதும் ஜெயம் ரவி,தமனா காதல் சம்பந்தபட்ட காட்சிகளில் திரைகதையின் வேகம் அருமை. இரண்டாவது பாதியில் நடுவுல் தொங்கினாலும், போலீஸ் ஆபீஸர்,ஷாம் ஜெயம் ரவிக்கும் இடையே நடக்கும் கேட் அண்ட் மவுஸ் கேம் இண்ட்ரஸ்டிங்க். அவர் ஏன் கொள்ளைகாரனாய் மாறினார் என்பதற்கான காரணம் அரத பழசு. அதே போல் க்ளைமாக்ஸ் கொள்ளை காட்சிகள் காதில் பூ
--
.jpg)