Pages

Tuesday, February 23, 2010

பிப் 26--கெளதம் மேனன் - ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாரா?

விண்ணை தாண்டி வருவாயா :


காதல்:
 அண்ட சராசரங்கள் அனைத்தும் ஏதோ ஓர் ஈர்ப்பில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.
அந்த ஈர்ப்பு ஒவ்வோர் அணுவிலும் நிரம்பியிருக்கிறது என்கிறது நம்ம  science . உயிர்சமூகம் ஆண், பெண் என இரண்டாகப் பிரித்து தங்களுக்குள் உருவாகும் ஈர்ப்பின் மூலம் இணைந்து முழுமை பெற்றுவிடுகிறது.



முரண்பாடு :
காதலுக்கு கண்ணில்லை, காதல் வரை முறையற்றது, எவராலும் காதலை கட்டுப்படுத்த முடியாது, யாருக்கும் யார் மேலும் காதல் வரலாம் என்கிறார்கள் சிலர். அது எல்லாம் வெற்றுப்பேச்சு, அப்படி வருவது எல்லாம் வெறும் ஒருவர்மேல் ஒருவருக்கு வரும் ஈர்ப்பு மட்டுமே, அதை காதல் என்ற பெயாரால் நாகரீகப்படுத்தி சொல்கிறார்கள் என்கிறார்கள் வேறு சிலர். 
இது எல்லாம் ஒரு புறமிருக்க காதல் என்பது புனிதமான ஒன்று, அது உணர்வு சம்பத்தப்பட்டது மட்டுமே, உடலுக்கும் காதலுக்கும் சம்பந்தமே கிடையாது"\ என்பவர்கள் ஒருபுறமும், "அப்படிப்பட்ட ஒன்று காதலே அல்ல, உடலும், உணர்வும் இணைந்து வருவதே காதல்" என்பவர்கள் சிலர் .
என்னை  பொறுத்தவரை  நவீன காதல்(maximum) உள்ளத்தைவிட உடற்கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவே இருக்கின்றது.
காதலைப்பற்றிப் பேசாத கவிஞர்களும் குறைவு, காதல் வசப்படாத மனிதர்களும் குறைவு.சரி  விண்ணை தாண்டி வருவாயா - ரசிகர்களின் எதிர்பார்ப்பை  பூர்த்தி செய்யுமா ?
கதை:


உதவிஇயக்குனர் கார்த்திக் கேரளாவிலிருந்துவரும்இளம்பெண்ணுடன்காதல்கொள்வதும் அதனால்வரும் பிரச்சனைகளும், காதலின் முடிவும்தான்படத்தின்கதை. 

கார்த்திக்  என்ற  உதவி    இயக்குனராக  சிம்பு நடித்துள்ளார். 
மலையாள கிறிஸ்தவ பெண் ஜெஸ்ஸியாக த்‌ரிஷா.
படத்தின் பாடல்களை முதலில்  லண்டனில் வெளிஇட்டார்கள் .75 ஆண்டுகால தமிழ்த்திரையுலகில் இது முதல் முறை. நிஜமாகவே பெருமைப்பட வேண்டிய விஷயம்தான்.என்னுடைய  விருப்ப பாடல் - ஆரோமலே .

 படத்தின்கிளைமாக்ஸைநியூயார்க் நக‌ரில எடுத்துள்ளனர். இதில் உண்மையாகவே சிம்பு அழுதாராம் (without glycerin) .படம்  பார்த்துவிட்டு வரும் போது   மனம் கணக்கும் என்கிறார்  கெளதம் வாசுதேவ்  மேனன் .

கெளதம் மேனன் : ரசிகர்களின் எதிர்பார்ப்பை  பூர்த்தி செய்வாரா ?

நான் கெளதம் மேனனின் - காதல் காட்சிகளுக்கு  தீவிர விசிறி ( மின்னலே, காக்க காக்க(butterfly music scene), வாரணம் ஆயிரம் ( train)).காதல் காட்சிகளுக்கு கெளதம் மேனன்  கைதேர்ந்தவர் எனலாம். நானும் என் நண்பர்களும்  பச்சைக்கிளி முத்துசரம்  முதல் காட்சி  கமலா தியேட்டரில் 
பார்த்தோம் - கெளதம் மேனனுக்காக...மிகுந்த ஏமாற்றம்.  i like dad .அதனால் வாரணம் ஆயிரம் .ok.
நான் எதிர்பார்த்த திரைபடகளான கந்தசாமி, ஆயிரத்தில் ஒருவன் , கோவா ,  my name is khan   ஏமாற்றத்தையே  தந்தன . இத்திரைப்படமாவது  ரசிகர்க.ளின் எதிர்பார்ப்பை  பூர்த்தி செய்யுமா? பிப்  26 இல்  பார்ப்போம்.
இத்திரைப்படம் தெலுங்கில்ye maaya chesaave (ரீமேக் ) என்கிற  பெயரில் நாக அர்ஜுனின்  மகன் சைதன்யா நடிக்கிறார் .
 

 






 



Thursday, February 18, 2010

THREE GODS!!![பிடித்தவை மட்டும்-அம்மா, அப்பா ,நண்பர்கள் ]




அம்மா-இன்னும் ஓர்பிறவி இருக்குமானால்
உன்னுதரமே என் கருவறையாகவேண்டும்.....



நம் வாழ்கையில எவ்வளவோ உறவுகள் இருப்பினும் தாய் பாசம் மட்டும் ஏன் எல்லாவற்றையும் விட ரொம்ப பெரியதா இருக்கு?
இத்தனை நாளா என்னால உணர முடிந்ததே தவிர விளக்கம் தர தெரியலா.....
நான்  படைக்கும் சாதனைக்கு வழியை அமைத்து கொடுத்தவள் அவள்.
என் மனம் :
அன்னைக்கு வாழ்க்கையில் எத்தனை சோதனை, எத்தனை வேதனை, எத்தனை யோசனை அனைத்தும் தமது பிள்ளைகளை நினைத்து. தவிர வேறு எதை நினைத்து.

நானும் எனது தாய்க்கு பல கஷ்டங்களை கொடுத்துள்ளேன். ஏன் தற்போது கூட என் அம்மா என்னை நினைத்து கொண்டே தான் இருக்கின்றாள். காரணம் நான்.

இன்றும் என்னுடன் தொலைபேசியில் பேசும் போது எத்தனை ஆலோசணை.

எனக்கு வழங்கும் ஆலோசணைகளை போல நிச்சயமாக என் சகோதரனுக்கு  ஆலோசணை வழங்கியதில்லை.

என்னை பொறுத்தவரை நான் இன்றும் எனது தாய்க்கு கஷ்டங்களை கொடுத்து வருகின்றேன் போல.அவள் என் மேல் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறாள் .

வேண்டுகோள் :
 .
ஜப்பான் நாட்டில் மொத்த வருவாயில் 30 சதவீதம், அந்நாட்டின் முதியோர்களுக்கு செலவு செய்யப்படுகிறது. ஆனால், இந்தியாவின் மொத்த வருவாயில் இரண்டு சதவீதம் கூட சீனியர் சிட்டிசன்களுக்கு செலவு செய்யப்படவில்லை' என்கிறது ஓர் ஆய்வு கட்டுரை . இந்தியாவில் 2055ம் ஆண்டில் மொத்த மக்கள் தொகையில் 35 சதவீதம் பேர் முதியோர்களாக இருப்பர். அப்போது, "முதியோரை பராமரிப்பது நாட்டின் மிகப்பெரிய சவாலாக இருக்கும்' என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்(NOTES FROM INDIAN WELFARE ASSOCIATES).
இன்றைய சமுதாயத்தில் பெற்றோர்களின்  நிலை, கேள்விக்குறியாகி வருகிறது.இவ்வுலகில்  கிமு,கிபி போல் ம.மு [மனைவி வருவதருக்கு  முன்],ம.பி[மனைவி வந்த பின்]  என்ற நிலை  உள்ளது. ம.பி என்ற நிலை வந்தவுடன் முதியோர் இல்லங்களில், பெற்றோரை ஒப்படைப்பது அதிகரித்து வருகிறது. இந்த அவலத்தை மாற்ற வேண்டும் . பெற்றோரையும், மனைவியும்  இரு கண்களாக மதிக்க வேண்டும்
MUST ACT:
  நாட்டிலுள்ள அனைத்து முதியோர் இல்லங்களையும் அரசுடமையாக்க வேண்டும்; மருத்துவம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தர வேண்டும். பெற்றோரை கடைசி காலத்தில் கவனிக்க, பிள்ளைகளின் சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்ய வேண்டும்.
என் கேள்வி :
 இருப்பினும், தங்களது பெற்றோரை முதியோர் இல்லத்துக்கு அனுப்பும் ஒவ்வொரு மகனும், மகளும், தங்களது மனசாட்சியிடம் "எனக்கும் வயதாகுமோ' என்று ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்டுப் பாருங்கள்.
வாழும் போது அன்னையரைப் பராமரிக்காது அவர்கள் மறைவின் பின் அவர்களை நினைத்து கவலைப்படுவதும் கண்ணீர் சிந்து வதும் அர்த்தமற்ற செயலாகும். உயிருடன் இருக்கும் போதே எமது அன்னையரைக் கெளரவிப்போம் 


Wednesday, February 17, 2010

WHO AM I ?

        தியானம் 
             VS 
         யோகா 








                     மனபலம் ------உடல்பலம்
                
   தன்னலமற்ற  அன்பால்  அனைவரையும்   கவர வேண்டும்.


உடல் வேறு ...உயிர் வேறு ...இது மாற்றமுடியாத  ஒன்று...நாம் உடல் வேறு ,உயிர் வேறு என்று வாழ பழகவில்லை ..காரணம் - நாம்  SENTIMENT TOUCH லே வாழ பழகிவிட்டோம். ATLEAST மனிதன் நிகழ்காலத்தில் வாழ பழக வேண்டும். நாம் இறந்தகாலத்திலும், எதிர்காலத்திலும் வாழ்ந்து  கொண்டு இருக்கிறோம். இதனால் நாம் துன்பம், பயம் போன்ற இல்லாத ஒன்றை நாம் உணருகிறோம் . உடனே இந்த மாயயை  போக்க நம்முள் இருக்கும் இறைவனை வெளியில் தேடி அலைகிறோம். இந்த மாயா திரையை  போக்க நாம் நம்மை  அறிய வேண்டும். நான் யார்? என்ற கேள்வியை ஆழமாக உன்னக்குள் கேள். விடையை காண எளிதான வழி -தியானம் & யோகா.
எதையும் சொல்லுவது எளிது... செய்வது அரிது ....
நம்மில் பலர் செயல்படுத்தும் வழிமுறைகளில் தேக்கம் அடைகின்றனர். இதை நடைமுறைபடுத்த தேவை - தியானம் & யோகா . தியானம் மூலம் மனதை வலுபடுத்தலாம். யோகா மூலம் உடலை வலுபடுத்தலாம் . இவ்விரண்டும்  நமக்கு கிடைத்த  வர பிரசாதம்.  .இதை உபயோகிக்க  பழக வேண்டும்.
கேள்வி: தியானம் செய்தால் மட்டும் தான்  உயர் நிலை அடைய முடியுமா?
தியானம் என்பது தன்னை உணரும் நிலை. பில்கேட்ஸ்,சச்சின்,ஒபாமா போன்றவர்கள்  தியானம் செய்தார்களா என்று தெரியாது. ஆனால் தன்னை உணர்ந்தார்கள்  வென்றார்கள். தியானம் உன்னை உணர  ஒரு  எளிய வழியாகும்.