அம்மா-இன்னும் ஓர்பிறவி இருக்குமானால்
உன்னுதரமே என் கருவறையாகவேண்டும்.....
நம் வாழ்கையில எவ்வளவோ உறவுகள் இருப்பினும் தாய் பாசம் மட்டும் ஏன் எல்லாவற்றையும் விட ரொம்ப பெரியதா இருக்கு?
இத்தனை நாளா என்னால உணர முடிந்ததே தவிர விளக்கம் தர தெரியலா.....
நான் படைக்கும் சாதனைக்கு வழியை அமைத்து கொடுத்தவள் அவள்.
என் மனம் :
அன்னைக்கு வாழ்க்கையில் எத்தனை சோதனை, எத்தனை வேதனை, எத்தனை யோசனை அனைத்தும் தமது பிள்ளைகளை நினைத்து. தவிர வேறு எதை நினைத்து.
நானும் எனது தாய்க்கு பல கஷ்டங்களை கொடுத்துள்ளேன். ஏன் தற்போது கூட என் அம்மா என்னை நினைத்து கொண்டே தான் இருக்கின்றாள். காரணம் நான்.
இன்றும் என்னுடன் தொலைபேசியில் பேசும் போது எத்தனை ஆலோசணை.
எனக்கு வழங்கும் ஆலோசணைகளை போல நிச்சயமாக என் சகோதரனுக்கு ஆலோசணை வழங்கியதில்லை.
என்னை பொறுத்தவரை நான் இன்றும் எனது தாய்க்கு கஷ்டங்களை கொடுத்து வருகின்றேன் போல.அவள் என் மேல் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறாள் .

வேண்டுகோள் :
.
ஜப்பான் நாட்டில் மொத்த வருவாயில் 30 சதவீதம், அந்நாட்டின் முதியோர்களுக்கு செலவு செய்யப்படுகிறது. ஆனால், இந்தியாவின் மொத்த வருவாயில் இரண்டு சதவீதம் கூட சீனியர் சிட்டிசன்களுக்கு செலவு செய்யப்படவில்லை' என்கிறது ஓர் ஆய்வு கட்டுரை . இந்தியாவில் 2055ம் ஆண்டில் மொத்த மக்கள் தொகையில் 35 சதவீதம் பேர் முதியோர்களாக இருப்பர். அப்போது, "முதியோரை பராமரிப்பது நாட்டின் மிகப்பெரிய சவாலாக இருக்கும்' என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்(NOTES FROM INDIAN WELFARE ASSOCIATES).
இன்றைய சமுதாயத்தில் பெற்றோர்களின் நிலை, கேள்விக்குறியாகி வருகிறது.இவ்வுலகில் கிமு,கிபி போல் ம.மு [மனைவி வருவதருக்கு முன்],ம.பி[மனைவி வந்த பின்] என்ற நிலை உள்ளது. ம.பி என்ற நிலை வந்தவுடன் முதியோர் இல்லங்களில், பெற்றோரை ஒப்படைப்பது அதிகரித்து வருகிறது. இந்த அவலத்தை மாற்ற வேண்டும் . பெற்றோரையும், மனைவியும் இரு கண்களாக மதிக்க வேண்டும்
MUST ACT:
நாட்டிலுள்ள அனைத்து முதியோர் இல்லங்களையும் அரசுடமையாக்க வேண்டும்; மருத்துவம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தர வேண்டும். பெற்றோரை கடைசி காலத்தில் கவனிக்க, பிள்ளைகளின் சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்ய வேண்டும்.
என் கேள்வி :
இருப்பினும், தங்களது பெற்றோரை முதியோர் இல்லத்துக்கு அனுப்பும் ஒவ்வொரு மகனும், மகளும், தங்களது மனசாட்சியிடம் "எனக்கும் வயதாகுமோ' என்று ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்டுப் பாருங்கள்.
வாழும் போது அன்னையரைப் பராமரிக்காது அவர்கள் மறைவின் பின் அவர்களை நினைத்து கவலைப்படுவதும் கண்ணீர் சிந்து வதும் அர்த்தமற்ற செயலாகும். உயிருடன் இருக்கும் போதே எமது அன்னையரைக் கெளரவிப்போம்

.jpg)
No comments:
Post a Comment